JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

அஜித் படத்தின் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கும் இரண்டு பிரபலங்கள்..!

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

முதல்கட்டமாக இந்த படத்தின் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தின் எடிட்டராக ரூபன் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளதகவும் கூறப்படுகிறது.

அஜித் படத்தில் ஏற்கனவே இரண்டு முறை பணியாற்றிய இரண்டு பிரபலங்கள் மூன்றாவது முறையாக விஸ்வாசம் படத்திலும் கூட்டணி சேரவுள்ளனர். ஒன்று அனிருத் மற்றொருவர் எடிட்டர் ரூபன்.

ஏற்கனவே அஜித் நடிப்பில் சிவா இயக்கிய ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ ஆகிய படங்களுக்கும் ரூபன், எடிட்டராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எடிட்டர் ரூபன் போலவே அஜித் படத்தில் மூன்றாவது முறையாக அனிருத் இந்த படத்தில் இணைந்து இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் T.தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22- ம் தேதி தொடங்கவுள்ளது.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: