JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

அஜித் பேசப்போற ஸ்லாங் இது தாங்கோ..! – விஸ்வாசம் அப்டேட்

நடிகர் அஜித்குமார் – சிறுத்தை சிவா நான்காவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருகின்றன.

இந்த படத்தை விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கை நான்கே மாதங்களில் முடிக்கிறேன் என்று கூறியுள்ளாராம் இயக்குனர் சிவா. கதையும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறுவது போல அமைக்கப்பட்டுள்ளதால் சிவா-விற்கு நான்கு மாதம் என்பதே அதிகம் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அஜித்குமார் போலீஸ் வேடமேற்று நடிக்கவுள்ள இந்த படம் ஒரு கம்ப்ளீட் கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது. நார்த் மெட்ராஸ் சுற்றி நடக்கும் கதை என்பதால் அஜீத் வடசென்னை ஸ்லாங்கில் பேசி நடிப்பார் என்று கூறுகிறார்கள். ஹீரோயினாக யார் நடிக்கப்போகிறார் என்பதை படக்குழுவே இன்னும் முடிவு செய்யவில்லையாம். இந்நிலையில், பிப்ரவரி 22-ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகும் என நம்பதகுந்த வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: