JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

அதே ரத்தம், அப்படிதான் இருக்கும்..! – விஜய் மகளின் திறமை..!

தளபதி விஜய் தற்போது தனது 62-வது படத்தை முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் படப்படிப்பு நடைபெற்று வருகின்றது.

நடிகர் விஜய்-க்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள விஷயம் அனைவரும் அறிந்ததே. இருவரையும் வெள்ளித்திரையிலேயே அறிமுகம் செய்து வைத்துவிட்டார் தளபதி. வேட்டைக்காரன் படத்தில் மகன் ஜெஷன் சஞ்சய்-யையும். தெறி படத்தில் மகள் திவ்யா சாஷா-வையும் அறிமுகம் செய்துவைத்தார்.

தற்போது ஆறாம் வகுப்பு படித்து வரும் திவ்யா சாஷா தனது பாட்டி ஷோபா சந்திரசேகர் மற்றும் தந்தை விஜய்யை போன்று பாடல்களை பாடுவதில் மிகுந்த ஆர்வமாக உள்ளாராம். இப்போதே, பல பாடல்களை திறமையாக பாடுகிறாராம். விரைவில் ஒரு சிறந்த பாடகியாக திவ்யா சாஷா வருவார் என கூறுகிறார் விஜய்க்கு நெருங்கிய வட்டாரங்கள்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: