JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

இதனால் தான் சிறுத்தை சிவாவுக்கு நான்காவது வாய்ப்பு – நடிகர் அஜித்குமார் கூறிய தகவல்

நடிகர் அஜித்குமார் தற்போது நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இதைப்பற்றித்தான் கோடம்பாக்கம் முழுதும் பேச்சாக கிடக்கிறது.

அஜித்துடன் பணியாற்ற முன்னணி இயக்குனர்கள் காத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், ஒரே இயக்குனருடன் மீண்டும் மீண்டும் கூட்டணி வைக்கிறாரே என்று முணுமுணுக்கிறது கோலிவுட் வட்டாரம். ஆனால், இந்த முறை சிறுத்தை சிவாவுடன் அஜித் கூட்டணி அமைத்துள்ளது பெரும்பானமையான அஜித் ரசிகர்களுக்கே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக உள்ளது.

இந்நிலையில், ஏன் அஜித் நான்காவது முறையாக சிவா-விற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து “சிவா என்னுடன் மூன்று படங்கள் பணியாற்றியுள்ளார். வேறு ஒருவருடன் படம் இயக்க செல்லும் போது வெற்றிப்பட இயக்குனர் என்ற பெயரோடு தான் செல்லவேண்டும். அதற்க்காக இந்த நான்காவது வாய்ப்பு” என்று அஜித் கூறியதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: