JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

என்னது, விஜய்யா..! இது..? – தளபதி62 விஜய்யின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்

மெர்சல் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 62வது படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் கீரத்திசுரேஷ் நாயகியாக நடிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சுமார் 120-130 கோடி பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. விவசாயத்தில் கார்பரேட் கம்பெனிகளின் மறைமுக தாகத்தை வெட்ட வெளிச்சமாக காட்டவுள்ள தளபதி62 படத்தில் நடிகர் விஜய் இன்னும் இளமையாக நடிக்கவுள்ளார்.

சமீபத்தில், டெஸ்ட்லுக் புகைப்பட போட்டோஷூட் பணிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கசிந்துவிட்டதால், அப்போது எடுக்கப்பட்ட எந்த புகைப்டத்தையுமே அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்யவில்லை படக்குழு.

இந்நிலையில், தளபதி62 படத்தில் விஜயின் தோற்றம் குறித்து ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னது, விஜய்யா..! இது..? மெர்சல் படத்தை காட்டிலும் இதில் இளமையாக உள்ளாரே..? என்று ஷாக் கமென்ட்களை பறக்க விட்டு வருகின்றனர்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: