JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

கண்டிப்பாக தல59 படத்தின் இயக்குனர் இவர்தான் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களின் பெயரை சொன்னாலே போதும் அவர்களுக்கு சரியான நடிகர் இவர் தான் என்று ஒரு நடிகரின் பெயர் நினைவுக்கு வரும். அந்த வகையில், விஷ்ணுவர்தன் என்று கூறினாலே உடனே அஜித்தின் பெயர் நியாபகத்துக்கு வந்து விடும்.

எந்த ஒரு வசனமோ அல்லது சண்டையோ, அக்ரோஷனமான சண்டையோ இல்லாமல் மெதுவாக திரும்பி, சாதாரணமாக பார்க்கும் பார்வையை மட்டுமே வைத்து ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களின் நரம்புகளை புடைக்கவைத்து திரையரங்குகளை அதிரவைத்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

இந்நிலையில், இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணுவர்தன் கூரியிருப்பதாவது, ” நான் அதிகமாக ட்விட்டரை பயன்படுத்துவதில்லை. இடையில் என்ன நடக்கிறது என்பதை உங்களிடம் நான் கூறுவது கிடையாது. ஆனால், ஒரு பெரிய தகவலோடு உங்களை சந்திப்பது தான் சிறந்தது. விரைவில் நல்ல தகவலோடு வருகிறேன்” என்று கூறியுள்ளார்

இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்திற்கு பிறகு தல59 படத்தை இயக்கப்போவது விஷ்ணுவர்தன் தான் என்று கமென்ட்களை பறக்கவிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: