JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

தலக்கு ஜோடியாக நயன்தாரா | கொண்டாடும் ரசிகர்கள்

நடிகர் அஜித்குமார் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகவுள்ள விஸ்வாசம் படத்தின் பணிகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக படத்தின் கதாநாயகி நயன்தாரா என்பதை அறிவிதுள்ளது படக்குழு. அஜித் தும்மினாலே உலக அளவில் ட்ரென்ட் செய்து கொண்டாடி தீர்க்கும் அஜித் ரசிகர்கள் இந்த அறிவிப்பிற்கு சும்மா இருப்பார்களா என்ன.

வழக்கம் போல டிவிட்டரில் ட்ரென்ட் செய்து கொண்டாடி தள்ளினர். ஆனால், நீண்ட நாள் கழித்து கிடைத்த அப்டேட் என்பதாலோ.? என்னவோ.? தெரியவில்லை. ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் #VISWASAMHeroineNayanthara என்ற டேக்கில் தங்களுடைய கருத்துக்களை கொட்டி தீர்த்து விட்டனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகள் இந்த ஹேஸ் டேக்கில் பதியப்பட்டன. இதனால் அதிர்ந்து போன ட்விட்டர் நிர்வாகம் ” அஜித் – நயன்தாரா ஜோடியை திரையில் மீண்டும் திரையில் பார்க்க இவ்வளவு ஆர்வமாக உள்ளீர்களா..?” என்று கேள்வி எழுப்பியுள்ளது

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: