JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

தல பட ஸ்டைலில் தளபதி படத்தில் வைக்கப்படவுள்ள காட்சி..! – முருகதாஸின் பலே திட்டம்

அஜித் படங்கள் என்றாலே அதில் ஒரு கார் சேஸிங் காட்சி கட்டாயம் இருக்கும். தமிழ் சினிமாவில் அஜித்தின் ட்ரேட் மார்க் சீன்களில் இதுவும் ஒன்று. இந்நிலையில், சென்னை முட்டுக்காடு பகுதியில் தளபதி62 படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தில் வரும் அறிமுக பாடலுக்கான செட் அமைத்து படமாக்கி கொண்டிருகிறார்கள். கத்தி படத்தை போல இந்த படத்திலும் சில காட்சிகள் கொல்கத்தா-வில் நடப்பது போல அமைக்கப்படவுள்ளதாம். அதில் முக்கியமான ஒன்று தான் இந்த கார் சேஸிங் காட்சி.

இந்த சேஸிங் அதிரடி ஆக்ஷன் காட்சியை ஹாலிவுட் தரத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. படத்தில் சுமார் இரண்டு நிமிடம் இந்த சேஸிங் காட்சி இடம்பெரும் என்றும், நடிகர் விஜய்யை புதிய கோணத்தில் இந்த காட்சி பிரதிபளிக்கும் என கூறுகிறார்கள்.

சென்னையில் முதற்கட்ட படப்படிப்பை முடித்துக்கொண்டு உடனடியாக கொல்கத்தா பறக்கவுள்ளது படக்குழு.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: