JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

தளபதி 63 படத்தை இயக்கபோவது இவர் தான் – கிட்டத்தட்ட உறுதியான தகவல்…!

நடிகர் விஜய் தற்போது தனது 62-வது படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருகின்றது. விரைவில், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக கொல்கத்தா செல்லவுள்ளது படக்குழு.

இந்நிலையில், தளபதி63 படம் குறித்த பல தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. அதில் ஒன்று இந்த படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த நிறுவனத்திற்கு தளபதி63 நூறாவது படம் ஆகும். இந்நிலையில், இந்த படத்தை இயக்கவுள்ளது யார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, விஜய்யை வைத்து தெறி, மெர்சல் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி தான் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருகின்றன எனவும் நம்பதகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிகின்றன.

இரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு மீண்டும் அமையவுள்ள விஜய் – அட்லி கூட்டணியால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: