JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

தளபதி63 படத்தை இவர்களுக்கு கொடுப்பது தான் சரி..! – நடிகர் விஜய் முடிவு..!

நடிகர் விஜய் தற்போது தனது 62-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பு காலம் ஐந்தே மாதங்கள் தான். ஜூலை மாத இறுதியில் இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துவிடும். பிறகு, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேளைகளில் படக்குழு இறங்கிவிடும்.

இந்நிலையில், தனது அடுத்த படமான தளபதி63 படத்தை தயாரிக்கும் வாய்ப்பை யாருக்கு கொடுப்பது என நடிகர் விஜய் குழப்பத்தில் உள்ளாராம்.

தனக்கு பல ஹிட் படங்களை கொடுத்த சூப்பர் குட் ஃப்லிம்ஸின் நூறாவது படத்தில் இணைவதா..? அல்லது மீண்டும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைவதா.? என்று குழப்பத்தில் உள்ளாராம். ஆனால், மெர்சல் படத்தின் மூலம் 200 கோடி வசூல் செய்திருந்தாலும். படத்தின் ரீலீஸ் சமையத்தில் கடுமையான பிரச்னைகளுக்கு உள்ளாகியும் அனைத்தையும் பல போராட்டங்களுக்கு பிறகு வென்று படத்தை ரிலீஸ் செய்தது தேனாண்டாள் நிறுவனம். இதனால், தளபதி63 வாய்ப்பை இவர்களுக்கு கொடுப்பது தான் சரி என்று முடிவு செய்துள்ளார் நடிகர் விஜய் என்கிறார்கள் நம்பதகுந்த வட்டாரங்கள்.

தளபதி62 படத்தின் ரிலீசிகற்கு முன்பே தளபதி63 படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கிவிடுவது என்ற முடிவில் இருக்கிறார் விஜய் என்பது கூடுதல் தகவல்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: