JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

தீபாவளிக்கு தனது விஸ்வாசத்தை காட்டுவாரா நடிகர் அஜித்குமார்..? – ரசிகர்களின் கேள்விக்கு பதில் இதோ

விவேகம் படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குனர் சிவா-வுடன் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார் நடிகர் அஜித். இந்த படத்தின் தலைப்பு “விஸ்வாசம்” என அறிவிக்கப்பட்டதோடு சரி.  படத்தின் படப்படிப்பு இன்னும் ஆரம்பமானபாடில்லை. தளபதி62 படப்படிப்பு ஆரம்பமாகி விட்ட நிலையில், தீபாவளிக்கு விஸ்வாசம் படம் வெளியாகுமா..? என்பதே பலதரப்பட்ட அஜித் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில், படத்தின் ஸ்க்ரிப்டிங் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றும் இந்த பணிகள் முடிந்த பிறகு படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்றும். அடுத்த வாரம் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் தகவல் வரும் என கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் டி.தியாகராஜன்.

கிட்டத்தட்ட படத்தின் படப்படிப்பு பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் ஆரம்பமானல் கூட தீபாவளிக்கு 9 மாதங்கள் எஞ்சியுள்ளன. இந்த கால இடைவெளி சிறுத்தை சிவா போன்ற இயக்குனர்களுக்கு அதிகமே. இதனால், கச்சிதமாக படப்பிடிப்பை நடத்தி தனது விஸ்வாசத்தை அஜித்திற்கு காட்டுவார் சிவா என நம்பலாம்.

தீபாவளியன்று தனது ரசிகர்களுக்கு தனது விஸ்வாசத்தை காட்டுவார் நடிகர் அஜித்குமார் என்பது உறுதியான வவிஷயமே

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: