JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

பொங்கலை மெர்சலாக்க விஜய் ரசிகர்கள் போட்ட மெர்சல் ப்ளான் – கை கொடுத்த பிரபல திரையரங்கம்..!

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி சக்க போடு போட்ட திரைப்படம் மெர்சல். கடந்த வருடம் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த நேரடி தமிழ்ப்படமும் இது தான்.

இந்திய வசூலை தாண்டி படம் பல இடங்களில் மாஸ் வசூல் செய்திருந்தது, அந்த தகவல்களை நம்முடைய தளத்திலேயே ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்ற மெர்சல் படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் மெர்சல் பொங்கலாக கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

இந்த நிலையில் மெர்சல் 100வது நாளை பிரம்மாண்டமாக கொண்டாடும் வகையில், ரசியக்ர்களுக்கு ஏதுவாக பிரபல திரையரங்கான ரோஹினி சில்வர் ஸ்க்ரீன்ஸ் பொங்கல் பண்டிகையன்று மீண்டும் படத்தை திரையரங்கில் வெளியிட இருக்கின்றனர். பொங்கலுக்கு, பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் நிலையிலும், மெர்சல் படத்திற்கு மட்டும் இதுவரை 500 டிக்கெட்டுக்கள் விற்றிருப்பதாக அத்திரையரங்க உரிமையாளர் தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். முதல் நாளோ, நூறாவது நாளோ..! விஜய் மீது ரசிகர் களுக்கு இருக்கும் க்ரேஸ் அப்படியே தான் உள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: