JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

பொங்கல் தினத்தில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் தளபதி – அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டிருப்பவர், இவருடைய படங்கள் வெளியாகினாலே ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இவருடைய நடிப்பில் அட்லீ இயக்கத்தில் இறுதியாக வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்புடன் நல்ல வசூலையும் பெற்றது.

இந்த படத்தை மிக பெரிய தொகைக்கு வாங்கிய ஜீ தமிழ் பொங்கலுக்கு மெர்சல் படத்தை ஒளிபரப்ப உள்ளது. அதேபோல் சென்னையில் பிரபல திரையரங்கமான ரோகினி தியேட்டரில் மெர்சல் படத்தை திரையிட உள்ளதாக அந்த தியேட்டர் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் உள்ளதாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: