JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

மீனவ மக்களின் பிரச்சனையை கையில் எடுக்கும் “முருகதாஸ்”

தளபதி நடிக்கும் 62வது படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படம் எந்த கதைகளத்தை வைத்து எடுக்கபடுகிறது என்ற சஸ்பென்ஸ் இன்னும் ரகசியமாகவே உள்ளது.

இதற்கு முன்பாக 2012ல் வந்த துப்பாக்கி படம் “ராணுவ வீர்களுக்கும்” 2014ல் வந்த கத்தி படம் “விவசாயிகளையும்” மையமாக வைத்து எடுக்கபட்ட கதை.இந்த இரண்டு படங்களும் தமிழில் மட்டுமல்லாது பல மொழியில் வெளியாகி வசூலை அள்ளி தந்தது.

தற்போது நடந்து வரும் விஜய்62 பட சூட்டிங் போட்டோக்கள் வெளியானது.அதை பார்க்கும் போது மீனவ மக்களை வைத்து படம் எடுக்கபடுவதாகவே தெரிகிறது. இதை இணையத்தில் டிரண்ட் செய்து வருகின்றனர் தளபதியின் தளபதிகள்.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: