JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

விஜய்62 படத்தில் இணைந்த முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்கள்

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவருகிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

சமீபத்தில் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது ஸ்டண்ட் காட்சிகளுக்காக ராம்-லக்ஷ்மன் ஆகிய முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்கள் தளபதி62 டீமில் இணைந்துள்ளனர்.

இரட்டையர்களான இவர்கள் தெலுங்கு சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வாரம் சென்னை ஈசிஆரில் நடந்த படப்பிடிப்பிற்கு பிறகு அடுத்த கட்ட ஷூட்டிங் கொல்கத்தாவில் நடந்துவருகிறது.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: