JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

விஸ்வாசம் படத்தில் இணைந்த முன்னணி தமிழ் பிரபலம்

நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கவுள்ளன. இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி 4 மாதங்களில் மொத்த படத்தையும் முடிக்கும் முனைப்பில் உள்ளது படக்குழு.

படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை நோக்கி அஜித் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க்கும் அதே நேரத்தில், படம் குறித்த பல தகவல்கள் நம்பதகுந்த வட்டாரங்களிடமிருந்து வந்துகொண்டிருகின்றன.

இந்நிலையில், பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் விஸ்வாசம் படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இவர் நடிப்பில் உருவாகியுள்ள “படை வீரன்” திரைப்படம் இன்று திரைக்கு வரவுள்ளது. விஸ்வாசம் படத்தில் தான் இணைந்துள்ளதை விஜய் யேசுதாஸே உறுதிபடுத்தியுள்ளார் என முன்னணி மலையாள ஊடகம் தெரிவித்துள்ளது.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: