JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

7வது முறையாக தளபதி63 படத்தில் இணையவுள்ள மாபெரும் கூட்டணி – செம்ம மாஸ் அப்டேட்

நடிகர் விஜய் “தளபதி62” படத்தில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுவருகின்றது.

இதனை தொடர்ந்து தளபதி63 படம் குறித்து வெளியான தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆம், நடிகர் விஜய்யின் தளபதி63 படத்தை தயாரிக்கவுள்ள நிறுவனம் “சூப்பர் குட் ஃபிலிம்ஸ்”. பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி, ஜில்லா என ஆறு விஜய் படங்களை தயாரித்துள்ளது சூப்பர் குட் பிலிம்ஸ். இந்த ஆறு படங்களும் விஜய்க்கு நல்ல ஹிட் படங்களாக அமைந்தன.

இந்நிலையில், ஏழாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளது சூப்பர் குட் ஃபிலிம்ஸ். இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் இது என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்தை பிரம்மாண்டமாக தாயரிக்க திட்டமிட்டுள்ளது சூப்பர் குட் ஃபிலிம்ஸ்.

ஏற்கனவே, தேனாண்டாள் நிறுவனமும் தனது 100-வது படத்தை விஜய்யுடன் சேர்ந்து மெர்சல் காட்டிய நிலையில், தற்போது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனமும் தனது 100-வது படத்தை விஜயுடன் சேர்ந்து தயாரிக்கவுள்ளது என்பது சிறப்பு தகவல்

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: