JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

அஜித் சார் தான் என்னுடைய ஆல் டைம் பேவரைட் நடிகர் – ஆனால், விஜய் சார்…? – அரங்கை அதிர வைத்த நயன்

எவ்வளவு சர்ச்சைகள் இருந்தாலும் படங்களில் தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளிவிடுகிறார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான “அறம்” திரைப்படம் ரசிகர்களிடம் அமோகமான வரவேற்ப்பை பெற்றது. “கத்தி” திரைப்படத்தின் கதை என்னுடையது என உரிமை கோரி சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனர் கோபி நயினார் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில், சிறந்த நடிகை 2017 என்ற விருதினை பிரபல பத்திரிக்கை ஒன்று நயன்தாராவுக்கு அறிவித்தது. விருதினை பெற நேற்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டார் இவர்.

விருது பெற வந்த நயன்தாராவிடம் விஜய், அஜித் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், ” அஜித் சார் தான் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் நடிகர். ஆனால், விஜய் சார் நான் பார்த்த நடிகர்களிலேயே மிகவும் சார்மிங்” என்று தெரிவிக்க அரங்கம் அதிர்கிறது.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: