நடிகர் ராணா பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றார். அவர் தற்போது பல தெலுங்க்கு, தமிழ் படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் அவர் அடுத்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார். விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரால் வதம் செய்யப்பட்ட அசுர அரசன் இரண்யகசிபுவாக ராணா நடிக்கிறார்.

இந்த படத்தை ராணாவின் தந்தை சுரேஷ் பாபு தயாரிக்கவுள்ளார். மொத்த பட்ஜெட் 180 கோடி ரூபாய் என்று செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு முன்னணி ஹீரோக்களின் படங்களை விட அதிக பட்ஜெட்டில் இவர் நடிப்பது சினிமா துறையில் உள்ளவர்கள் வாய்பிளக்கவைத்துள்ளது.

அஜித்தை விட அதிக சம்பளம் இவர் வாங்குகிறார் என சமூகதளங்களில் பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

Like
Like Love Haha Wow Sad Angry