பிக்பாஸில் காட்டியதெல்லாம் பொய் | எடிட் செய்து ஏமாற்றியுள்ளனர் – நித்யா

பரபரப்பாக போய் கொண்டு இருக்கும் பிக்பாஸ் -2 ஒரு எழுதி வைத்து பேசப்படும் ஸ்கிரிப்ட் என்பதை ஆதரத்துடன் நிருபவித்துள்ளார் நித்யா.

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் இருவருக்குமான பிரச்சனை முடிந்துவிட்டது என்பது போல டிவியில் காட்டினர்.

இந்நிலையில் தற்போது ஒரு பிரபல மீடியாவுக்கு பேட்டியளித்துள்ள நித்யா “இன்னும் பிரச்சனை அப்படியே தான் இருக்கிறது. ஆறு ஏழு வருஷமாக கஷ்டத்தை அனுபவித்த நான் எப்படி ஒரே மாதத்தில் மாறிவிடுவேன். போஷிகா பேசியது அவளாக பேசியது இல்லை.. அவளை அப்படி பேசவைத்துள்ளார்கள் பிக்பாஸ் டீம். நான் பேசியதை கூட எடிட் செய்துவிட்டார்கள்” என நித்யா கூறியுள்ளார்.

பிக்பாஸில் காட்டியதெல்லாம் பொய் | எடிட் செய்து ஏமாற்றியுள்ளனர் - நித்யா

“நீ உள்ளே இருக்கிறதுதான் எனக்கும் நல்லது. போய் விவாகரத்து தொடர்பான நீதிமன்ற வேலைகளை முடிச்சிடுறேன்!” என்று தான் பாலாஜியிடம் கூறிவிட்டு வந்தாராம்.

இப்படி மக்கள் வாக்களித்து நம்பிக்கை வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் நம்பிக்கையை வைத்து பணம் சம்பாரிக்கும் அற்ப நிகழ்வு தான் நேர்ந்து கொண்டிருக்கிறது.

Like
Like Love Haha Wow Sad Angry