தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை பலப்படுத்த போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனால் தனது ரசிகர் மன்றத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.

அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘என் அன்பிற்குரிய ரசிகர்களுக்கு வணக்கம். உங்களின் கடின உழைப்பினால் தான் நமது நற்பணி மன்றம் சிறந்து விளங்குகிறது.

நமது மன்றத்தின் நலன் கருதி நீண்ட ஆலோசனைக்கு பிறகு, நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவராக சுப்பிரமணியம் சிவாவையும் செயலாளராக ராஜாவையும் நியமிக்கிறேன். இவர்களுக்கு எப்போதும் போல் உங்களின் முழு ஒத்துழைப்பை தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.’ என கூறப்பட்டுள்ளது.

இந்த சுப்பிரமணியம் சிவா வேறு யாருமில்லை, தனுஷின் நடிப்பில் வெளியான திருடா திருடி, சீடன் மற்றும் அமீரின் யோகி முதலிய படங்களை இயக்கியவர்

Like
Like Love Haha Wow Sad Angry
41