கனடாவை சேர்ந்த பிரபல பாப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கும், அமெரிக்க மாடல் ஹெய்லி பால்ட்வின்னுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

24 வயதான ஜஸ்டின் பீபருக்கு அமெரிக்காவில் உள்ள பஹாமாஸ் ரிசார்ட்டில் நிச்சயதார்த்தம் நடந்ததாக டிஎம்இசட் இணையதளம் தெரிவிக்கிறது.

நிச்சயதார்த்தம் நடப்பதற்கு முன்பு ரிசார்ட் ஊழியர்களின் மொபைல் போன்களை வெளியே வைக்குமாறு, பீபரின் பாதுகாப்பு பணியாளர்கள் கூறியுள்ளனர்.

நிச்சயதார்த்தம் குறித்த செய்திகளை சிஎன்என் மற்றும் ஈ நியூஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜஸ்டின் பீபரும், ஹெய்லியும் முன்பு டெட்டிங் செய்த நிலையில், சமீபத்தில்தான் அவர்கள் மீண்டும் இணைந்தனர்.

படத்தின் காப்புரிமைREUTERS

தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த ஜஸ்டினின் தந்தை ஜெர்மி, ”அடுத்த அத்தியாயத்திற்காக மகிழ்ச்சியுடன் இருப்பதாக” பதிவிட்டுள்ளார். ஜஸ்டினின் தாயார் பாட்டி மாலெட் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தனது நீண்ட நாள் காதலி செலினா கோம்ஸிடம் இருந்து ஜஸ்டின் பிரிந்த பிறகு, ஜஸ்டினும் ஹெய்லியும் மீண்டும் இணைந்துள்ளதாக டிஎம்இசட் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நடிகரும், தயாரிப்பாளருமான ஸ்டீபன் பால்ட்வின்னின் மகளான ஹெய்லி, மாடலிங் பிரசாரங்கள், இசை வீடியோக்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.

Like
Like Love Haha Wow Sad Angry