எல்லை மீறிய மகத் & யாசிக்கா கொந்தழித்த ரசிகர்கள் | விஜய் டீவி மீது புகார்

தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முதல் சீசனை போல் அதிகம் பரபரப்பு இல்லாமல் இருந்தாலும், டிஆர்பி அதிகமாகவே கிடைத்துவருவதாக செய்தி வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்தை சீரழிப்பதாக நேற்று சில அமைப்புகள் நேற்று விஜய் டிவி முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.

“சினிமாவிற்கு கூட சென்சார் உள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சி எந்த வித சென்சார் இல்லாமல் நான்கு சுவற்றுக்குள் நடப்பதை அப்படியே காட்டி இளைஞர்களை சீரழிக்கிறது. கமல் மட்டுமில்லை இந்த நிகழ்ச்சியை எந்த நடிகர் தொகுத்து வழங்கினாலும் போராட்டம் நடத்துவோம்” என அவர்கள் கூறியுள்ளனர்.

யாஷிகா, ஐஸ்வர்யா உள்ளிட்ட சில நடிகைகள் சில ஆண்களுடன் மிக நெருக்கமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மக கவர்ச்சியாக உடை அணிந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here