Oh Snap!

Please turnoff your ad blocking mode for viewing your site content

Tamil cinema news

CINEMA | ENTERTAINMENT | TRENDING

“தல” தோனியின் இமாலய சாதனை | தடைகளை தகர்த்த தல

/
/
10 Views

“தல” தோனி நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்திற்க்கு எதிராக ஆடிய ஒருநாள் போட்டியில் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க இந்தப் போட்டியில் 43வது ஓவரின் போது தோனி 34 ரன்கள் எடுத்திருந்த போது, ஒருநாள் போட்டியில், அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர்களின் பட்டியலில் 4வது இடம் பிடித்து சாதனை பிடித்துள்ளார்.

அதோடு, ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் ரன்கள் கடந்தவர்களில் தோனி 12வது இடம் பிடித்துள்ளார். அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள் எடுத்தவர்களில் 5வது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக, 10,000 ரன்கள் கடந்த இந்தியர்களில் சச்சின் (18426), கங்குலி (11221), டிராவிட் (10768) ஆகியோர் 2வது இடங்களில் உள்ளனர். இந்தப் பட்டியலில் தோனி (10000*) 4வது இடம் பிடித்துள்ளார்.

அதோடு, 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது விக்கெட் கீப்பர் இந்த சாதனையை தோனி படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்ககரா படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிக வயதானவர்கள் பட்டியலில் 10 ஆயிரம் ரன்கள் கடந்தவர்களில் தோனி (37 வயது) 3வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தப் போட்டியின் போது 300 கேட்ச்கள் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Like
Like Love Haha Wow Sad Angry
  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *