JUST BE FILMY

Cinema News | Videos | Promotions

மெர்சல் நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர்

டிவி தொடரில் நடித்தபோதே பெரிய ரசிகர் வட்டத்தை ஈர்த்தவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான மேயாத மான் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

தற்போது பிரியாவுக்கு பல்வேறு வாய்ப்புகள் குவிந்துவருகிறது. கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் அடுத்து அவர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாகஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஒருநாள்கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

மெர்சல் படத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest
%d bloggers like this: