சச்சின் மகள் சாராவின் புதிய படம் ;

கிரிக்கெட் கடவுள் என இந்தியளவில் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சச்சின் டெண்டுல்கர். இவரின் சாதனைகள் பற்றி சொன்னால் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

சாதனை படைக்க தயாராக இருக்கும் பலருக்கு அவர் தான் பெரும் உற்சாகம். ஓய்வு பெற்றாலும் அணிக்கு தேவையான ஆலோசனைக்கு வழங்கி வருகிறார்.

அவர் குழந்தைகள் நல மருத்துவர் அஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சாரா என்ற மகளும், அர்ஜூன் என்ற மகனும் இருக்கிறார்கள். சாரா தற்போது கல்லூரி படிப்பை முடித்து விட்டாராம்.

இருபது வயதாகும் அவருக்கு படித்துக்கொண்டிருக்கும் போதே படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் சச்சின் தான் படிப்பு தடை படும் என வந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம்.

சாராவுக்கு நடிக்கும் ஆசையிருக்கிறதாம். அண்மைகாலமாக பொது நிகழ்ச்சிகளில் அவர் மாடர்ன் உடைகளில் கலந்துகொண்டு எல்லோரையும் அசரவைத்து வருகிறார்.

இவரின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமிலும் வந்துள்ளது. தற்போது மீண்டும் வாய்ப்புகள் அவரை நோக்கி படையெடுத்துள்ளதாம். சச்சினின் சம்மதத்திற்காக காத்திருக்கிறார்கள்.

Like
Like Love Haha Wow Sad Angry