சிம்புவுடன் இணையும் ஸ்ரீதேவீயின் மகள்

சிம்புவுடன் இணையும் ஸ்ரீதேவீயின் மகள்

பல தடைகளை தகர்த்து தனக்கென ஒரு முத்திரை பதித்து வலம் வரும் நடிகர் சிம்பு சமிபகாலமாக நிறைய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தில் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜான்வி கபூர் தற்போது மராட்டியில் வெளிவந்த ‘சாய்ராட்’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘தடக்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவுடன் இணையும் ஸ்ரீதேவீயின் மகள்

மேலும், அஜித் நடித்திருக்கும் ‘பில்லா’ படத்தை சிம்புவை வைத்து ரீமேக் செய்யப்போகிறார் என்பதற்கு மறுப்பு தெரிவித்து, இந்தப் படத்துக்கு புது ஸ்க்ரிப்ட் வைத்திருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருக்கிறார். ‘பார்ட்டி’ படம் ரிலீஸானதுக்குப் பிறகு, இப்படத்துக்கான வேலைகள் தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here