காவிரியிலிருந்து 50,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒக்கேனக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடக மாநிலம் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் கடந்த இரு நாள்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை அணைக்கு நொடிக்கு 14,334 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, புதன்கிழமை காலை 32,284 கன அடியாக அதிகரித்துள்ளது.

தற்போது 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்தால் இந்த மாத இறுதிக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும்.

புதன்கிழமை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதால், பண்ணவாடி பரிசல் துறையில் நீருக்கு வெளியே தெரிந்த ஜலகண்டேசுவரர் ஆலயத்தின் நந்தி சிலை நீரில் மூழ்கியது.

அணையின் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் திறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் ஒக்கேனக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதே போல ஈரோடு, திருச்சி, டெல்டாவான தஞ்சை மாவட்டங்களிலும் வெல்ல அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. காவிரி கர்நாடகத்தின் எல்லையில் உருவாக்கி, தமிழகம் எங்கும் பரந்து விரிந்து நீண்டு பாய்வதால், அதன் கரையெங்கும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை கண்ணாரக் கண்டு ரசிக்க முடியும்.

இதுகுறித்து உங்களது கருத்துகளை எழுதுங்கள்.

Like
Like Love Haha Wow Sad Angry
1